தமிழக அரசியலில் தேமுதிக தவிர்க்க முடியாத சக்தியாக மலர்ந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் தனது 61-ஆவது பிறந்த நாளை ஆகஸ்ட் 25-ஆம் தேதி கொண்டாடுகிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் தன் பிறந்த நாள் தொடர்பாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தீராத பல பிரச்னைகள் உள்ளன.
அவற்றைத் தீர்க்கும் முயற்சியில் தேமுதிக எதிர்காலத்தில் ஈடுபடும். அதே நேரம் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றால் தற்போது தவிக்கும் தமிழக மக்களுக்கு உரிய தொண்டு புரிவோம்.
ஒரு நல்ல எதிர்காலம் தமிழக மக்களுக்கு அமைய என் பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழக அரசியலில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மலர்ந்துள்ளது. அதற்காக தமிழக மக்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன். தமிழக மக்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
பிறந்த நாளில்... வறுமை ஒழிப்பு தினமாக என் பிறந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.65 லட்சம் செலவில் 4 சக்கரங்கள் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்கள் வழங்க உள்ளேன்.
எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உள்ளேன். தேமுதிகவின் 59 மாவட்டங்களிலும் இதுபோன்ற நல உதவிகளை வழங்க வேண்டும். ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்தாலும், அந்தச் சோதனைகளைச் சாதனைகளாக்கி மக்களுக்குத் தொண்டு செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கஞ்சா விற்றதாக துணிக்கடை ஊழியா் கைது
ஜாா்க்கண்ட்: மின்னல் தாக்கி பெண்கள், சிறாா் உள்பட 8 போ் உயிரிழப்பு

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



