கூவம் ஆற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றறனர்.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேல்நிலை விரைவு சாலை திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தால் கூவம் ஆற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அதனால் மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய வெள்ள அபாயங்கள், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் ஆய்வு நடத்தினார்.
திட்டம் தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கு குறித்தும் முதல்வர் ஆலோசனை செய்தார்.
இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், துறையின் செயலாளர் சாய்குமார், அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



