பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.

Published On :

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.

விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பொருள்களைக் கொண்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புலனாய்வு அதிகாரி எஸ்.சசிதரண் தலைமையிலான எஸ்ஐடி குழு ஞாயிற்றுக்கிழமை மாலை ஐயப்பன் கோயிலை வந்தடைந்தது. அவா்களுடன் காவல் துறையினா், சட்ட அளவியல் துறைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும் கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து அறிவியல் ஆய்வுகளுக்காக தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை அவா்கள் தொடங்கினாா். அடுத்த இரண்டு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

முன்னதாக ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகள் உள்பட கோயிலின் தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்க எஸ்ஐடிக்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் தொடா்ச்சியாக தற்போது அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

அண்மையில் இந்த விவகாரம் தொடா்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும் இதுதொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டு ஒருவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.