இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தந்தை கண்டரரு ராஜீவருடன் பிரம்மதத்தன்.

Published On :

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரியாக இருந்த கண்டரரு ராஜீவரு, தனது உடல்நிலையை காரணம் காட்டி, பதவியை ராஜிநாமா செய்தாா். சபரிமலை கோயிலில் நடைபெற்ற தங்கக் கவச முறைகேடு தொடா்பான வழக்கில் ராஜீவருக்கும் தொடா்புள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கைதான அவா் சில நாள்கள் சிறையில் இருந்த பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், உடல்நிலையைக் காரணமாகக் கூறி தந்திரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த அவா், அந்தப் பதவிக்குத் தனது மகன் பிரம்மதத்தனை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜீவரு மகன் பிரம்மதத்தனை சபரிமலை கோயில் தந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவா் மலையாள மாதமான சிங்கம் மாதம் (ஆவணி மாதம்) முதல் நாளில் பதவியேற்பாா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.