பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி..

Sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை. - file photo

Published On :23 ஜூன் 2026, 4:40 pm IST

கார்த்திகை உள்ளிட்ட மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணப்படும் பக்தர்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து ஏஐ நிறுவனங்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு இறுதியில் கூட்டம் அதிகரிக்கும்போது, அதனை செய்யறிவால் நிர்வகிப்பது குறித்து திருவாங்கூர் தேவஸ்தானம், கேரள காவல்துறை உள்ளிட்டோர் செய்யறிவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கரள்.

கடந்த ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 51 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.

தில்லி, சென்னை, மும்பை உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த செய்யறிவு நிபுணர்களுடன் நடத்திய ஆய்வில், கோயிலின் பல்வேறு துறை அதிகாரிகளை ஒருங்கிணைப்பது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஓரிடத்தில் கூட்டம் அதிகரிக்கும்போது, டிரோன்கள் மூலம் கண்காணித்து அங்கு உடனடியாக பக்தர்களை வேறு பகுதிகளுக்கு அல்லது வரிசைகளுக்கு மாற்றுவது போன்றவற்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்துக்குள் காணாமல் போகும் பக்தர்களை எளிதாகக் கண்டுபிடிப்பது, வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தவும், வெளியே எடுக்கவும் வழிகாட்டுவது போன்றவற்றையும் செய்யறிவு மூலம் மேற்கொள்ள பேசப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

18 படிக்கு அருகே கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை செய்யறிவு ஆய்வு செய்து அளித்தால் உடனடியாக அங்கே நிலைமையை சீர்செய்வது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, கோயிலில் கூட்ட நிலவரத்தை வெளியிலிருந்து வரும் பக்தர்களுக்கு அங்கேயே தெரிவிப்பது போன்றவையும் இதில் இடம்பெற உள்ளன.

Summary

Smart technology to be implemented at the Sabarimala Ayyappan Temple too! It will help control the crowds.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.