சபரிமலை ஐயப்பன் கோயிலில் கர்கிடகம் மாதப் பிறப்பை முன்னிட்டு, இன்று நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது.
இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய்யாபிஷேகம், உஷா பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, மலர் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெறும். கற்பூர ஆழியில் தீபமேற்றப்பட்டதும், பக்தர்கள் 18 ஆம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து 5 நாள்களுக்கு சிறப்பு பூஜைகளும் தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 21 ஆம் தேதி இரவில் ஹரிவராசனத்துடன் கோயில் நடை அடைக்கப்படும்.
மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Sabarimala Ayyappan Temple will reopen today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!
நிறம் மாறிய சபரிமலை தங்க மேற்கூரை! பக்தர்கள் அதிர்ச்சி!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்








