பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு தனிமைச் சிறை: கருணாநிதி

பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு தனிமைச் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு தனிமைச் சிறை: கருணாநிதி
Updated on
1 min read

பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு தனிமைச் சிறைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தில்லியில் ஒரு மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கோரக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்திலும் அது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

தில்லி சம்பவத்தின்போது, பாலியல் கொலை புரிபவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்று கூறினேன். இதுதான் கடுமையான தண்டனையாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் கொடுமை செய்தவர்களுக்குத் தூக்குத் தண்டனைதான் வழங்க வேண்டுமென்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா பாலியல் குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தால் ஓராண்டு காலத்தில் குற்றவாளிகள் வெளியில் வந்து, மீண்டும் பாலியல் குற்றம் புரிவார்கள். எனவேதான் ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com