யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுவை மாணவிகளுக்கு "ஓவர் கோட்', தனி பஸ்

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கான சீருடையில் அதிரடி மாற்றம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:28 pm

தினமணி

புதுச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கான சீருடையில் அதிரடி மாற்றம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுடிதார் சீருடையின் மீது, துப்பட்டாவுக்கு பதிலாக, ஓவர் கோட் அணியும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர்களுக்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தார்.

புதுச்சேரியில், பள்ளி மாணவியருக்கு உள்ள பிரச்னைகள், அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்வித்துறைச் செயலர் ராகேஷ்சந்திரா, இயக்குநர் இ.வல்லவன், இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.

முதல்வர்கள், ஆசிரியைகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், கல்வியமைச்சர் தி.தியாகராஜன் பேசியது:

ஆசிரியர் பணி கடினமானதுதான். ஆனாலும், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. கல்வியோடு ஒழுக்கம், உளவியல் ரீதியான பாடங்களையும் ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.

வீட்டைவிட அதிக நேரம் செலவழிக்கும் இடம் பள்ளி. எனவே, மாணவர்களை ஒழுங்குபடுத்த ஆசிரியர்களால் முடியும்.

அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி, ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பெற்றோரிடம் அடையாளம் காட்ட வேண்டும். சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டால், அதை பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் சீருடையை மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் ஏற்கெனவே உள்ளது. இங்கு ஆசிரியைகள் கூறிய கருத்துப்படி, மாணவியரின் சுடிதார் மீது துப்பட்டாவுக்குப் பதில் ஓவர் கோட் அணியும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.

பள்ளி மாணவ, மாணவியர் ஒன்றாகப் பயணிக்கும் வகையில் ஒரு ரூபாய் கட்டணத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இனி, அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி தொடங்கியும், மாணவியருக்கு எனத் தனியே சிறப்பு பஸ்களை அரசு இயக்கும்.

அதேபோல, மாணவ, மாணவியர் செல்போன் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், கண்டறியவும் சிறப்புப் படை உருவாக்கப்படும்.

அதேநேரத்தில், உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படும் என்றார் கல்வியமைச்சர் தி.தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.