கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்வடைந்தது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனை நாள்தோறும் படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
பயணிகள் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குகன், பொதிகை ஆகிய படகுகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறைப் பகுதிகளில் கடல் நீர்மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய படகுப் போக்குவரத்து காலை 8.45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் காலை 10.15 மணிக்கு கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் படகுகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வரிசையில் நின்ற பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அப்படீங்களா!
பேல்பூரி

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


