விழுப்புரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றது. பிடாகம் அருகே செல்லும் போது லாரியின் முன்புற டயர் பஞ்சர் ஆனது. இதனைத் தொடர்ந்து டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் சென்ற சென்னையைச் சேர்ந்த கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பரணிதரன்(32), சண்முகம்(32) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

சாலையில் பரப்பிய நெல்களின் மீது பைக்கில் சென்றபோது விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பவானி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்! ரகசியப் பாதை அமைத்துள்ளதாக புகாா்!

வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்த அரக்கோணம் தவெக எம்எல்ஏ
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
