வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேசப்பற்றை வலியுறுத்தி நெல்லையில் காந்தி வேடத்தில் அணிவகுத்த 5360 மாணவர்கள்

சாதனை நிகழ்ச்சிக்காகவும் காந்தியத்தை வளர்த்து பேணும் வகையில் புதன்கிழமை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் எல்.கே.ஜி.  முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர், மாணவிகள் 5,360 பேர் காந்தி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2014, 1:40 pm

ஷேக் அப்துல்காதர்

சாதனை நிகழ்ச்சிக்காகவும் காந்தியத்தை வளர்த்து பேணும் வகையில் புதன்கிழமை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் எல்.கே.ஜி.  முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர், மாணவிகள் 5,360 பேர் காந்தி வேடத்தில் திரண்டு அணிவகுத்த காட்சி பார்வையாளர்களை பரவசமடைய வைத்தது.

காந்தியத்தை போற்ற வேண்டும். காந்தியின் அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும், போதை, பிளாஸ்டிக், வன்முறை ஒழிப்பு, சாதி வேற்றுமையை களைதல்,மாற்றுத் திறனாளியை போற்றுதல், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்தல் போன்றவற்றை வலியுறுத்தவும், உலக சாதனை நிகழ்ச்சிக்காக எல்.கே.ஜி. பயிலும் 3 வயது குழந்தை முதல் கல்லூரி மாணவர், மாணவிகள் 5,360 பேர் காந்தி வேடத்தில் அணிவகுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரோஸ்மேரி கல்வி நிறுவனங்கள், விவேகானந்தா வித்யாலயா, சாராள் தக்கர் தொடக்கப் பள்ளி, லிட்டில் பிளவர், சி,எஸ்.ஐ. மெட்ரிக், பெல், சைல்டு ஜீசஸ், சாரதா கல்லூரி, மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 5360 மாணவர், மாணவிகள் காந்திய உணர்வுடன் மகாத்மா காந்தியை நினைவுகூறும் வகையில் கையில் கம்பு, காந்தியக் கண்ணாடி, வேட்டி, ஒரு முழம் துண்டு, தலைமுடியை மறைக்கும் ஒப்பனையுடன் கையில் தேசிய கொடியினை ஏந்தி மைதானத்தில் மாணவர், மாணவிகள் அணிவகுத்து உறுதிமொழி எடுத்தனர். உலக சாதனை நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்த மாணவர்கள் அணிவகுப்பை அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட் அமைப்பின் நிறுவனர் ஆர். ராஜேந்திரன் பதிவு செய்தார்.

சென்னையில் 1,600 மாணவர்களும், திருச்சியில் 2,900 மாணவர்கள் திரண்டனர். பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காந்திய உடையில் தோன்றி அணிவகுத்த காட்சி காண்போரை பரவசமடைய செய்தது. குழந்தைகளிடம் தேசப்பற்றை வளர்க்கவும் காந்தியத்திற்கு உறுதி சேர்க்கவும் இந்நிகழ்ச்சியினை நடத்தியதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளம் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் வி. விவேகானந்தன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் பூ. திருமாறன், தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தள அமைப்பின் செயலர் எஸ். முத்துசாமி, காந்திய சிந்தனையாளர் சி. ராம்மோகன், அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ, சங்குமுத்துதேவர், சாரதா கல்லூரி நிர்வாகி யதீஸ்வரிசரவணபிரியாம்பாள், கோபாலசமுத்திரம் கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன், தாமிரவருணி இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் க. சுப்பிரமணியமழவராயர், அம்பை கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் கண்ணன் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.