தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் சுதந்திரதின விழாக்கள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து என்சிசி

News image
Updated On :15 ஆகஸ்ட் 2014, 1:13 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திரதின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கர்னல் ஆர்.சீனுவாசன், கேப்டன் ஆர்,கனகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் 10 மாணவர்களுக்கு இளம் செஞ்சிலுவை சங்க சிறந்த தொண்டர் விருதினை வழங்கிப் பேசினார். விழாவில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், ஸ்ரீமாலினி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் ஜே.வசந்தகுமார் மற்றும் புல முதல்வர்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம் நகராட்சியில் நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். உதவிஆட்சியர் அலுவலகத்தில் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தேசியக்கொடி ஏற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜி.அன்புச்செல்வி தேசியக்கொடி ஏற்றினார். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தேசியக்கொடி ஏற்றினார். இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் பங்கேற்றனர். சிதம்பரம் எம்எல்ஏ அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக்கொடி ஏற்றி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமையில் பள்ளி மாணவி வி.பவித்ரா தேசியக்கொடி ஏற்றினார். கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். முதல்வர் கோ.சக்தி முன்னிலை வகித்தார். வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப்பள்ளியில், முதல்வர் ஜி.மீனாட்சி முன்னிலையில் சிட்டியூனியன் வங்கி மேலாளர் ஆர்.ராம்நாத் தேசியக்கொடி ஏற்றிவைத்தார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் பேராசிரியர் எம்.அன்பானந்தம் தேசியக்கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் முன்னிலை வகித்தார். அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் தலைமையில் அரிமா சங்கத் தலைவர் ஜே.திருமால் தேசியக்கொடி ஏற்றினார். ராமாசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன் தலைமையில் உதவி கருவூல அதிகாரி கே.ஹசன்ஹான் தேசியக்கொடி ஏற்றினார். ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளியில் அறங்காவலர் டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வி.அழகப்பன் தேசியக்கொடி ஏற்றினார்.

பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் சி.என்.சிங்காரவேலு தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார். ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி எஸ்.ஆர்.திருநாவுக்கரசு தலைமையில் முன்னாள் மாணவர் கோ.ராஜசேகரன் தேசியக்கொடி ஏற்றினார். தலைமைஆசிரியர் ஆர்.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் செயலர் கே.சேதுசுப்பிரமணியன் தலைமையில் கோயில் நகர அரிமா சங்கத் தலைவர் டி.கே.விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றினார். சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர்.ராஜன் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவர் ஆர்.பாஸ்கரன் தேசியக்கொடி ஏற்றினார். வழக்குரைஞர் ஏ.சம்பந்த சிறப்புரையாற்றினார். சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளிில் பள்ளிக்குழுத் தலைவர் ஏ.விஸ்வநாதன் தலைமையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி தேசியக்கொடி ஏற்றினார்.

தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் சார்பில் செயலாளர் சி.டி.அப்பாவு தலைமையில் நடைபெற்ற விழாவில் கோயில் நகர அரிமா சங்கத் தலைவர் டி.கே.விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றினார். நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழஆவில் பி.பி.கே.சித்தார்த்தன் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தேசியத்கொடி ஏற்றினார். நகர மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இ.ரசூல்கான் தலைமையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் என்.வி.சூரியமூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார். காமராஜர் கல்வி நற்பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவிற்கு செயலாளர் ஆர்.மகாலிங்கம் தலைமை வகித்தார். நிறுவனர் சி.பி.ரத்தினம் தேசியக்கொடி ஏற்றினார். சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அதன் தலைவர் பா.மில்லர் தேசியக்கொடி ஏற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.