ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனைவியைக் காணவில்லை: கணவர் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.மூவறைவென்றான் கிராமத்சைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ஆதிலட்சுமி (23). இவர்களுக்கு

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 1:27 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
மூவறைவென்றான் கிராமத்சைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ஆதிலட்சுமி (23). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. முருகன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்று வருவதாய் கூறிச் சென்ற ஆதிலட்சுமி இதுவரை வீடு திரும்பவில்லையாம். இதன் பேரில் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை முருகன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆதிலட்சுமியைத் தேடி வருகிறார்கள்.

இளம் பெண்ணைக் காணவில்லை: கீழக்கோட்டையூரைச் சேர்ந்தவர் சங்கரப்பநாயக்கர் மகள் முத்துலட்சுமி (25). இவரது பெற்றோர் இறந்துவிட்டதால், தாய் மாமன் எஸ்.காளிமுத்து (50) என்பவர் பராமரிப்பில் முத்துலட்சுமி உள்ளார். சென்னையில் செவிலியர் வேலை செய்து வரும் முத்துலட்சுமி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு 29.7.14-ம் தேதி சென்னைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால் சென்னைக்கு போகவில்லையாம். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லையாம். இதனையடுத்து காளிமுத்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.