பணம் கேட்டு விவசாயியை மிரட்டியதாக வன அலுவலர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை மிரட்டி ரூ.75 ஆயிரம் கேட்டதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர்கள் நான்கு பேர் மீது போலீஸார்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியை மிரட்டி ரூ.75 ஆயிரம் கேட்டதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர்கள் நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பட்டாக்குளம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் தாவீது மகன் ராஜா (35). இவருக்கு வத்திராயிருப்பு-தாணிப்பாறை பகுதியில் தோப்பு உள்ளது. இதில் மா, தென்னை, கொய்யா போன்றவை பயிரிட்டுள்ளார். வன விலங்குகள் தோட்டத்தைச் சேதப்படுத்துவதைத் தடுக்க தோப்பைச் சுற்றி வேலி அமைத்துள்ளார். கடந்த 13.4.2013 அன்று வேலிக்கு அருகே பன்றி ஒன்று இறந்துகிடந்துள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலகத்தின் வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், சின்னக்கருப்பன், மற்றும் சுப்புராஜ் (A.W.P.), தீக்காப்பாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு பன்றிக்கு அருகில் ராஜாவை அமரவைத்து வனத்துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும், ரூ.75 ஆயிரம் பணம் கேட்டு ராஜாவை வனத்துறை அலுவலர்கள் மிரட்டியுள்ளார்கள். இதனால் ராஜா அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதற்கான ரசீதுவை ராஜா கேட்டபோது, வன அலுவலர்கள் மேலும் ரூ.20 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விவசாயி ராஜா புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட வனத்துறை அலுவலர்கள் மீது வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வனக் காப்பாளர்கள் ராமச்சந்திரன், சின்னக்கருப்பன், சுப்புராஜ், சங்கரபாண்டியன் ஆகியோர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...