சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மார்ச்சுக்குள் 1662 ரயில் பெட்டிகள்

நடப்பு நிதியாண்டில் (மார்ச் மாதத்துக்குள்) 1662 ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்க உள்ளது பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். இணைப்பு பெட்டி தொழிற்சாலை.

Updated On :15 ஜனவரி 2014, 8:21 pm

நடப்பு நிதியாண்டில் (மார்ச் மாதத்துக்குள்) 1662 ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்க உள்ளது பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். இணைப்பு பெட்டி தொழிற்சாலை.

1662 ரயில் பெட்டிகளை தயாரிப்பதன் மூலம் வரலாற்றில் அதிகப்படியான பெட்டிகள் தயாரித்து வழங்கும் சாதனையை ஐ.சி.எஃப். பெறும்.

இந்திய ரயில்வே துறைக்கு 58 ஆண்டுகளில் 46 ஆயிரம் ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப். தயாரித்து வழங்கியுள்ளது இணைப்புப் பெட்டி தொழிற்சாலை.

இந்தியாவில் அதிக தொழில்நுட்பங்களை அடக்கிய ரயில் பெட்டிகளை சென்னையில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை ஆண்டுதோறும் தயாரித்து வழங்குகிறது.

2012-2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய ஐ.சி.எஃப். 1,620 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கியது. இப்போது 2013-2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய 1,662 பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது.

பல நவீன ரக ரயில் பெட்டிகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஐ.சி.எஃப்., ஆண்டுதோறும் 7.2 சதவீதம் வளர்ச்சியைக் கண்டு வருகிறது ஐ.சி.எஃப்..

பயோ டாய்லெட்: இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் கடந்தாண்டு முதல் தயாரிக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 874 ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது.

பயோ டாய்லெட் கழிவறைகளில் கழிவுகள் ரயிலுக்கு அடியில் வைக்கப்படும் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும். இந்த தொட்டியில் பாக்டீரியாக்கள் இருக்கும்.

இந்த பாக்டீரியாக்கள் கழிவுகளை வாயுவாகவும், தண்ணீராகவும் பிரித்துவிடும். தொட்டியில் தண்ணீர் நிறைந்துவிட்டால் ரயில் 30 கிலோ மீட்டருக்கு அதிக வேகத்தில் ஓடும்போது தானாகவே திறந்து அதிலுள்ள தண்ணீர் வெளியேறிவிடும். ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை தொட்டியில் புதிய பாக்டீரியாக்கள் விடப்படும்.

சோலார் விளக்குகள்: ரயில்களில் பயன்படுத்தும் ஒளி விளக்குகள், மின் விசிறிகள் அனைத்தும் சோலார் சக்தியின் மூலமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய ஒளி சக்தியை ஈர்க்கும் சோலார் பேனல்களை ரயில்களின் மேல் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல ஐ.சி.எஃப். அலுவலகத்தில் 100 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான சோலார் பேனல்களும் வாங்கப்படவுள்ளன.

ஏற்றுமதி: இலங்கைக்கு 20 பெட்டிகள் கொண்ட 6 ரயில்களை ஐ.சி.எஃப். ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் மியான்மருக்கான ரயில் பெட்டிகளும் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்துக்கும் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் கொல்கத்தா மெட்ரோ ரயில், மும்பை புறநகர் ரயில் சேவைக்கான ரயில்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.