திருச்செந்தூர் வந்த மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனை ஈராக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி செவிலியர் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பா.ஜ.க. மாநித்தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருச்செந்தூர் வந்த அமைச்சரை திருக்கோவில் விருந்தினர் மாளிகையில் வைத்து, ஈராக்கில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி கால்டுவெல்காலனியைச் சேர்ந்த செவலியர் லெஷிமா ஜெரோஸ் மோனிஷாவின் தாயார் எட்விஜம்மாள், உறவினர்களான அமல்ராஜ், ஜனார்த்தனம், ரமேஷ் கிலேரி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அவர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஈராக்கில் நாட்டில் அரசுக்கு எதிராக மத தீவிரவாதிகள் உள்நாட்டுப்போர் நடத்தி வருகின்றனர். அப்போரில் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா, மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 41 பேர் சிறைப்பிடிக்கப்ட்டிருந்தனர். பாரதப்பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரின் துரித நடவடிக்கையினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கிலிருந்து நாளை (சனிக்கிழமை) வரும் இந்திய செவிலியர்களை கேரள மாநில பா.ஜ.க. தலைவர் முரளிதரன் வரவேற்கிறார் என அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


