ஆடி அமாவாசை விழா: காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு 120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப்


காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் கிளை மேலாளர் எஸ். மாரியப்பன் தெரிவித்தார்.
காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா ஜூலை 26 ஆம் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் வசித்தாக குடிநீர், சுகாதாரம் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரமசி்ங்கபுரம் நகராட்சி, மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துக் கழக பாபநாசம் கிளை மேலாளர் எஸ். மாரியப்பன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 120 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி (புதன்கிழமை) யில் இருந்து ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து காணிக்குடியிருப்புக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...