மாஞ்சோலையில் யானை, சிறுத்தைப்புலி அட்டகாசம்: பேரூராட்சித் தலைவர் புகார்
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை, நாலுமுக்கு பகுதியில் சிறுத்தைப்புலி, யானை, கரடி போன்ற விலங்கினங்கள் அட்டகாசம் செய்து வருவதால்


திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை, நாலுமுக்கு பகுதியில் சிறுத்தைப்புலி, யானை, கரடி போன்ற விலங்கினங்கள் அட்டகாசம் செய்து வருவதால் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் வி. சிவன்பாபு புகார் தெரிவித்தார்.
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவர் வி. சிவன்பாபு, துணைத் தலைவர் சோ. பாலகங்காதரன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது பேரூராட்சித் தலைவர் கூறியதாவது: பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டப் பகுதியில் 5,000 க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த வனப்பகுதி களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் உள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ சிகிச்சை போன்ற தங்களது தேவைக்காக மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வர வேண்டும். ஹ
தொழிலாளர்கள் அரசு பேருந்து, தனியார் வாகனங்கள் மூலம் வந்து செல்வதுண்டு.
அண்மை காலமாக தோட்டத் தொழிலாளர்கள் அங்கிருந்து அம்பை, மணிமுத்தாறு வந்து செல்ல வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. வனத்துறை அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடி சந்திக்கும் நிலை உள்ளது.
பேரூராட்சிக்குட்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி பகுதியில் அரசு உத்தரவை அடுத்து பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடு்க்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் பெயர் பலகைகள் வைக்க அனுமதி மறுத்து வருகின்றனர். பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அங்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
குண்டு குழியுமாக உள்ள மணிமுத்தாறு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து அருவி செல்லும் சாலையை சீரமைக்கவும், மாஞ்சோலையில் இருந்து குதிரைவெட்டி செல்லும் சாலையை சீரமைக்கவும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆற்றின் குறுக்கே பழுதடைந்த பாலத்தை சீரமைக்கவும் பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது.
மாஞ்சோலை, ஊத்து பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கரடி, காட்டுப் பன்றிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. நாலுமுக்கு பேருந்து நிறுத்தம் பகுதியில் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் வீட்டிலே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. அவசரத் தேவைக்கு வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. நாலுமுக்கு பகுதியில் காட்டு யானைகள் அட்டாகாசம் இருந்து வருகிறது.
விலங்கினங்கள் அட்டகாசம் செய்து வருவதால் மாஞ்சோலை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து தெரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...