ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடும் வேளையில் பாழடைந்த நிலையில் ராஜேந்திர சோழனின் கல்லறை
மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவரது கல்லறை பராமரிப்பில்லாமல் பாழடைந்த நிலையில் இருந்து வருகிறது.


மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவரது கல்லறை பராமரிப்பில்லாமல் பாழடைந்த நிலையில் இருந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு பழங்காலக் கோயிலாக அந்தக் கல்லறை அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், கங்கைகொண்ட சோழன், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திர சோழனின் கல்லறைக் கட்டடம்தான் அந்த பழமையானக் கோயில் ஆகும்.
ராஜேந்திர சோழன், அவரது எண்பதாவது வயதில் காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வந்தபோது, பிரம்மதேசம் கிராமத்தில் இறந்துவிட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.
பழமையான கோயில் எனக் கருதப்படும் ராஜேந்திரனின் கல்லறை, தற்போது தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தக் கல்லறையைச் சுற்றி தொல்பொருள் துறை சார்பில் கம்பியாலான முள்வேலி மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்தக் கோயிலில் விளக்கு வசதியும் இல்லை. பாழடைந்த நிலையில் புல், பூண்டு முளைத்தும் கற்கள் சிதைத்தும் பரிதாப நிலையில் கல்லறை காட்சியளிக்கிறது.
ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவர்; தன் தந்தையுடன் களங்களில் பங்கேற்று பல போர்களில் வெற்றிவாகை சூடியவர்; பண்டித சோழன் என்று வரலாற்றில் புகழப்பட்டவர்; இத்தனைப் பெருமைகள் பெற்ற ராஜேந்திரன் கல்லறை, பிரம்மதேசம் மற்றும் இதன் அருகில் வசித்துவரும் கிராம மக்களுக்கும் தெரியாத நிலையில் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது.
தனி மனிதனின் வாழ்க்கை என்பது ஓர் குறுகிய எல்லைக்குள்பட்டதாகும். ஆனால், ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவர். அவரது நினைவையும், அவரது வரலாற்றையும் நினைவு கொள்ளும் வகையில் ராஜேந்திர சோழன் கல்லறையைப் பாதுகாத்து புதுப்பிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...