எவிஏஓக்கு கொலை மிரட்டல்
திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.


திருவண்ணாமலை அருகே கிராம நிர்வாக அலுவலருக்குக் கொலை மிரட்டல் விடுத்தவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராம ஏரி புறம்போக்குப் பகுதியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக மலப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி குறிப்பிட்ட ஏரியில் சிப்பந்திகளுடன் சென்று கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் (57) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஏரியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் (58), கதிர்வேலு ஆகியோரிடம் ஏரி புறம்போக்கில் வீடு கட்டக்கூடாது என்று எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கிராம நிர்வாக அலுவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...