இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் தமிழ்மாறன் தெரிவித்ததாவது, பழனிக்கோயிலில் தற்போது ஆன்மீகம் குறைந்து வியாபாரம் அதிகமாகி வருகிறது. மலைக்கோயிலில் யாரும் இரவு இருக்க கூடாது என்ற ஆகமவிதி மீறப்பட்டு இரவிலும் இயந்திரங்களைக் கொண்டு பணி நடக்கிறது. ஆகவே, தஞ்சாவூரை போல பழனிக்கோயிலில் பூஜைகளை இந்து சமய அறநிலையத்துறையும், சிலைகள் பராமரிப்பை மத்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நகர இளைஞரணி தலைவர் பாலன் கூறுகையில், மேற்படி அறைகளில் பல ஆண்டு காலமாக ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் வழிபாடு செய்து வந்த தட்சிணாமூர்த்தி, சிவனின் திருமேனிகள், ஆகர்ஷண சொர்ண பைரவர், அம்பாள் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. இவை பீடத்துடன் ஆகமவிதிப்படி இவை நிர்ணமாணிக்கப்பட்டது. பல அறைகள் நாயக்கர் காலத்திலேயே கட்டப்பட்ட கல்கட்டிடமாகும். இவற்றை இடிக்காமல், சிலைகளை அகற்றாமல் பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையிலான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.