பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2014, 3:41 am

குமார முருகன்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 100 அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குசெழியநல்லூர் மற்றும் ஆவுடையானூர்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் கொம்பன்குளம் மற்றும் செங்கோட்டையிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் கீழ்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியையும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.