வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்ணாவிரதம்

திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,

News image
Updated On :1 செப்டம்பர் 2014, 12:52 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பாளையங்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆயுள் காப்பீடு, பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, ரயில்வேத்துறையில் தனியாரை அனுமதிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மான்யங்களை குறைக்கும் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும்
திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தலித், பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கோக் தனியார் நிறுவன அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.