அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் புதிய முல்லையாறு பாலம் கட்ட ஏற்பாடு

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பாலத்தை இடித்து, ரூ.2.50 கோடியில் புதிய பாலம்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2015, 12:23 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான பாலத்தை இடித்து, ரூ.2.50 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசின் முயற்சியால் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிதியில், பல பாலங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

முல்லையாறு பாலம் மட்டுமே மேற்கண்ட பாலங்கள் வரிசையில் சிறியதாகும். பாலம் குறுகியதாக இருப்பதால், இப்பகுதியில் லாகன விபத்துகள் அதிகரித்துவருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை கூறும்போது, முல்லையாறு பாலம் ரூ.2.50 கோடியில் கட்டப்படவுள்ளது. உபயோகத்தில் இருக்கும் பாலத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டப்படும். ஒப்பந்ததாரருக்கு  பணியாணை வழங்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் மணல் கொட்டப்பட்டுவருகிறது. இப்பகுதியில்  தாற்காலிகமாக புறவழி அமைக்கப்படும். பிரதான போக்குவரத்துக்குரிய நெடுஞ்சாலையாக இருப்பதால்,  பாலம் கட்டுமானம் விரைவாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.