விருதுநகர் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி 12 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 114 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு முன்பு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டும், அரசு பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 204 அரசு மதுபான கடைகளும் திறக்கப்பட்டதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இம்மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் முக்குரோட்டில் மதிமுகவின் மாநில மருத்துவ அணிச்செயலாளர் ரகுராமன் தலைமையில் 14 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல், ஆலங்குளத்தில் தமிழ்நாடு சிமெண்ட் தொழிற்சாலை முக்குச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சதுரகிரி தலைமையில் 2 பேரும், வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் இருதயராஜ் தலைமையில் 8 பேரும், திருத்தங்கல் அம்பேத்கார் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருலாளர் மனிதநேயன் தலைமையில் 16 பேரும், ஏழாயிரம்பண்ணை அருகே வல்லம்பட்டியில் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கவேலு தலைமையில் 21 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு மதிமுகவின் மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் 15 பேரும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் திருக்கோயில் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளம் சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளர் தலைமையில் 2 பேரும், வச்சக்காரப்பட்டி அருகே கன்னிசேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் 3 பேரும், காரியாபட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் வடுகன் தலைமையில் 9 பேரும், வெம்பகோட்டை அருகே தாயில்பட்டியில் மதிமுக ஒன்றிய செயலாளர் மாரிசெல்லம் தலைமையில் 5 பேரும், நரிக்குடியில் அரசு மதுபானக் கடை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் தலைமையில் 9 பேரும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 114 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

