என்.எல்.சி தொழிலாளர்கள் 2வது நாளாக முற்றுகை போராட்டம்: 750 பேர் கைது
நெய்வேலி தொழிலாளர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் 750 பேர் கைது செய்யப்பட்டனர்.


நெய்வேலி தொழிலாளர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் 750 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக என்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் நிரந்தர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் அறிவித்தது போல் இன்று அனல்மின் நிலையம் ஒன்றை முற்றுகையிட முயன்றனர். முன்னதாக க்யூ பாலத்தில் இருந்து அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொருளர் தேவானந்தன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அனல்மின் நிலையம் ஒன்றை நோக்கி பேரணி அமைத்தனர். இவர்களைப் பாதி வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வட்டம் 24-யில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். முற்றுகை போராட்டத்தில் 750 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாளை, பெரியார் சதுக்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...