தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்எல்சி: தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது

என்எல்சி நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2015, 4:57 am

சீனிவாசன்

என்எல்சி நிரந்தர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று காலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்கள் ஜூலை 20ம் தேதி இரவுப் பணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர் அறிவித்தபடி, செவ்வாய்க்கிழமை அன்று முதல் சுரங்கத்திலும், புதன்கிழமை அனல்மின் நிலையம் ஒன்றையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வியாழக்கிழமை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். காலை 9.50 மணியளவில் பெரியார் சிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் கோஷம் எழுப்பியவாறு என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர்.

இவர்களை நேரு சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பாதுகாப்புப் பணிக்காக ஏடிஎஸ்பி செந்தில் தலைமையில் நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.