மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சுழியில் அரசு டாஸ்மாக் கடை தொடங்க பொதுமக்கள் ஆட்சேபனை

திருச்சுழியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை தொடங்குவதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Updated On :7 ஆகஸ்ட் 2015, 1:22 pm

திருச்சுழியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை தொடங்குவதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து திருச்சுழி கிராமம் ராமசாமி தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சுழியில் ராமசாமி தெருவில் தனியார் மொபைல் கடைக்கு அருகே புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்க இருக்கின்றனர். ஏற்கனவே இத்தெருவில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த தெரு குறுகிய தெருவாக இருக்கிறது. இதுவழியாகத்தான் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், பெண்கள் குடிநீர் குழாய்களில் தண்ணீர் எடுக்கவும் செல்கின்றனர். அதேபோல், தனியார் அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இக்குறிப்பிட்ட தெருவில் டாஸ்மாக் கடை திறந்தால் குடிகாரர்கள் தெருக்களில் நின்று கொள்ளும் சூழ்நிலையிருக்கிறது. அதனால், இப்பகுதியில் தேவையில்லாத சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதோடு, அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.