விருதுநகர் அருகே பன்றிகளை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயார் செய்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவி்ல் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே சேர்வைக்காரண்பட்டியைச் சேர்ந்தவர் எம்.பெரியண்ணன்(45). இவர் தனது வீட்டின் அருகே தோட்டத்திற்கு வரும் பன்றிகளை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்தாராம். இதில், தனக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த பி.பெரியண்ணன்(47), சின்னமாயன்(48) மற்றும் உசிலம்பட்டி அருகே குருத்துப்பட்டியைச் சேர்ந்த மொக்கைபாண்டி(55) அழைத்து வந்து வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டிற்கு அருகே ஒதுக்குபுற பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது, எதிர்பாரத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டதில் மொக்கைப்பாண்டி படுகாயமும், எம்.பெரியண்ணனுக்கு லேசான காயமும் அடைந்தனர்.
உடனே இரண்டு பேரையும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி மொக்கைப்பாண்டி உயிரிழந்தாராம்.
இது தொடர்பாக ஆனைக்குட்டம் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்ததில் பி.பெரியண்ணன், சின்னமாயன் ஆகியோர் மேலஆமத்தூரில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வேலைபார்த்ததும், அங்கிருந்து சல்பர் உள்ளிட்ட பொருள்களை திருடிக் கொண்டு வந்து தயாரித்த போதுதான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.பெரியண்ணன், சின்னமாயன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான என்.பெரியண்ணனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

