அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: தாணிப்பாறையில் 500 போலீஸார் பாதுகாப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

Updated On :11 ஆகஸ்ட் 2015, 2:09 pm

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரன் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயிலில் ஆடி அமாவசை திருவிழா 12ம் முதல் 15-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்வார்கள். இதில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு-பேரையூர் சாலை பிரிவில்  தாணிப்பாறை சாலை நுழைவு பகுதிகளிலிருந்து மலை அடிவாரம் வரையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 20 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் 12-ம் தேதி முதல் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல், தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள மலையேற்ற பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் கருவியால் பக்தர்களை சோதனை  செய்த பின்னரே மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்படுவர். திருக்கோயிலுக்கு வரும் பாதை, தாணிப்பாறை அருகே அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் நகைத் திருடர்கள் மற்றும் ஜேப்படி திருடர்கள் ஆகியோரை கண்காணிக்க  சீருடையில்லாத சாதாரண உடையில் ஆண், பெண் காவலர்கள் ஈடுபட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்து வசதி: இக்கோயிலுக்கு எளிதாக சென்று வரும் வகையில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளி்ட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 13-ம் தேதி முதல் 16-ம்தேதி வரையில் 42 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கூடுதல் பக்தர்கள் வந்தால் அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் உடனே ஏற்பாடு செய்யப்படும் என அரசு போக்குவரத்துக் கழக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.