விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2015, 10:35 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர்கள் ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர திருநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா இம் மாதம் 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினமும் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெற்றது.

ஐந்தாம் திருநாளான 12-ம் தேதி (புதன்கிழமை) இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது. 7-ம் திருநாளான 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நடைபெற்றது.

9-ம் திருநாளான 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.

அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் புறப்பாடு நடைபெற்று, திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. காலை 8.05 மணிக்கு தேரை உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினரும், ராம்கோ தொழில் குழுமத்தின் தலைவருமான பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, பெங்களூரு வைதேகி தொழில் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.பிரேம்சந்தர் கல்பஜா ஆகியோர் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன், தென்மண்டல காவல் துறைத் தலைவர் அபய்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசந்தி முருகேசன், டி.ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெ.பொன்னுப்பாண்டியன், க.கோபால்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.மயில்சாமி, தக்கார் கே.ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் எம்.வீரசண்முகமணி, சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா, நகர்மன்ற உறுப்பினர்கள் வ.முனியப்பன், மீராதனலட்சுமி முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

12-ம் திருநாளான 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) புஷ்பயாகத்துடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.