அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஊரக வாழ்வாதார திட்டம் 35 வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ஆதார நிதி வழங்கும் நிகழ்ச்சி

மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் கிராமங்களில் செயல்படும் 35 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஆதார நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஆகஸ்ட் 2015, 1:20 pm

மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் கிராமங்களில் செயல்படும் 35 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ஆதார நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமங்களில் பல்வேறு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டு இலக்கு மக்களை கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களை உறுப்பினர்களக கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு ஆதார நிதி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அதில், இந்த ஒன்றியத்தைச் சேர்ந்த மெட்டுக்குண்டு, இனாம்ரெட்டிபட்டி, எண்டப்புலி, கோட்டநத்தம், கோவில்வீரார்பட்டி, மருளூத்து, கடன்பன்குளம், செந்நெல்குடி மற்றும் மன்னார்கோட்டை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 35 வறுமை ஒழிப்பு சங்கங்களின் நிர்வாகிகளிடம் ஆதார நிதியாக தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், தூய்மை பாரதம் இயக்க திட்டம் செயல்படுத்தப்படும் மீசலூர், சத்திரரெட்டியாபட்டி ஆகிய ஊராட்சிகளில் செயல்படும் ஊராட்சி கூட்டமைப்பிலிருந்து தனி நபர் கழிப்பறை அமைக்க 7 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கான காசோலைகளையும் ஆட்சியர் வே.ராஜாராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.