விருதுநகரில் உயர் மின் அழுத்த கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் நகர் மற்றும் குல்லூர்சந்தைக்கு செல்லும் உயர் மின் அழுத்த பிரிவு கம்பத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் புதன்கிழமை மாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசன்அலி(22) என்பவர் உயர் மின் அழுத்த மின்சாரம் செல்லும் வகையிலான வயர் இணைப்பு கொடுக்க மின்கம்பத்தில் ஏறினாராம். அப்போது, மின்சாரம் தாக்கியதில் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

