விருதுநகரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப்பிரசாரம் இன்று இரவு நடைபெற்றது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் நடந்த நடந்த கூட்டத்திற்கு சட்டப்பேரவை தொகுதி செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான கி.கலாநிதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் மா.சாந்தி, நகர செயலாளர் நயினார் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தெருமுனைப்பிரசார கூட்டத்தில் அதிமுகவின் சிறப்பு பேச்சாளர் திருப்பூர் சாந்தி கலந்து கொண்டு, 4 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், இதில் மாவட்ட அவைத் தலைவர், நகராட்சி உறுப்பினர் ஐ.மருது, நகராட்சி துணைத்தலைவர் மாரியப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவையின் துணைத்தலைவர் சங்கரலிங்கம், வழக்குரைஞர் விஜயகுமார், ஐ.ஆர்.மகேந்திரன், உள்ளி்ட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல், பஜார் பகுதியில் நெல்லுக்கடை மைதானத்திலும் தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சங்கராபுரத்தில் ஹாட்ரிக் முனைப்பில் திமுக! வீழ்த்த முயலும் அதிமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

