குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை களைவது தொடர்பாக இன்று நடந்த மாநில அளவிலான கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தனியார் அரங்கத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு ஸ்பீச் தொண்டு நிறுவன இயக்குநர் எர்ஸ்கின் தலைமை வகித்தார். தகவல் தொடர்பாளர் லிபி ஜோப்சன், கண்காணிப்பு அலுவலர் சிஜிமேத்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய சபை வேண்டுகோளின்படி அடுத்துவரும் 15 ஆண்டுகளில் குழந்தைகள் அனைவரும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும். அதன் அடிப்படையில் இக்கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் குழுக்கள் அமைத்து விவாதம் செய்து கருத்தரங்கில் தீர்மானங்களை சமர்பித்தனர்.
அதில், குழந்தைகளின் கருத்துக்களை மதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாக்கவும் மருத்துவ வசதி செய்வதற்கு தனி விடுதிகள் அமைக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து, வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளின் திருமணத்தை தடுக்கவும் வேண்டும். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பள்ளிகள் தோறும் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்

அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

