புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

2016 ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் நள்ளிரவு பூஜைக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு பூஜைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 10:57 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு பூஜைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்து முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம்.

இந்துக்களின் ஆகம விதிப்படி அர்த்தஜாம பூஜை முடிந்து கோயில் பள்ளியறை நடை சாத்திவிட்டால், மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் திருப்பள்ளி எழுச்சியுடன் மட்டுமே கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது நம்முடைய சம்பிரதாயம், ஆகம விதிகளை மறந்தவர்கள் கிறிஸ்தவ முறைப்படி ஆங்கில புத்தாண்டில் நடுநிசியில் நடைமுறைக்கு விரோதமாக இந்து ஆலயங்களில் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யும் போக்கு நிலவுகிறது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு கோயிலிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டுக்கும் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மீறி வழிபாடுகள் நடைபெற்றால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.