தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (டிஜிட்டல்மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் விவரம்:
தமிழ்மொழி உலகத்தின் மூத்தமொழி என்ற சொல்லுக்குக் காரணமாக இருப்பது தமிழின் வேர்ச்சொற்களாகும். அந்தச் சொற்களை ஆய்வு செய்வதற்காக அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்ககம், செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் 13 ஆயிரத்து 327 பக்கங்கள் அடங்கிய 31 தொகுதிகளைக் கொண்ட நூல்களை வெளியிட்டுள்ளது.
இந்த 31 தொகுதிகளும் எண்மப்படுத்தப் பட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிழவயல் விநாயகா் கோயில் குடமுழுக்கு

25.6.1976: வறட்சி நிலை: மத்திய நிதி மந்திரியுடன் சுகாதியா பேச்சு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தின் 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


