ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பா.ஜ.க.யில் 1.70 லட்சம் பேர்: மாவட்டச் செயலாளர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பாரதீய ஜனதா கட்சியில் 1.70 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா கூறினார்.

News image
Updated On :12 ஜூலை 2015, 5:58 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக பாரதீய ஜனதா கட்சியில் 1.70 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா கூறினார்.

நாடு முழுவதும் மிஸ்டு கால் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக தங்களை பாரதீய ஜனதா கட்சியில் இணைத்துக் கொள்ள 1.70 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து மிஸ்டு கால் கொடுத்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டும் 22 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதனை உறுதி செய்வதற்காக அவர்களை நேரடியாக சந்திக்கும் இயக்கம் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கியது.

இந்த இயக்கத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சரவணதுரை (எ) ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.டி.சோலையப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானபண்டிதன், நகத் தலைவர் சேடப்பட்டி முருகன், நகரச் செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.