மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எம்.எஸ்.வி மறைவு: தி.வேல்முருகன் இரங்கல்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு தமிழ் திரை உலகிற்கு பெரும் இழப்பு என பண்ருட்டி தி.வேல்முருகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 ஜூலை 2015, 5:45 am

சீனிவாசன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு தமிழ் திரை உலகிற்கு பெரும் இழப்பு என பண்ருட்டி தி.வேல்முருகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக கோலோச்சிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., நம்மை பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது.

ஜெனோவா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் கால் பதித்து 1,200 படங்களுக்கு இசை அமைத்து காலத்தால் அழியாப் புகழ் பெற்றவர். இசை அமைப்பாளர், பாடகர், நடிகர் என தமது பன்முகத்தை வெளிப்படுத்தியவர் எம்.எஸ்.வி. அவர்கள்.

இந்த தமிழ் மண்ணை இசையால் தாலாட்டிய மாபெரும் இசைமாமேதை இன்று நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு பிரிந்துவிட்டார். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.