ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

News image
Updated On :17 ஜூலை 2015, 11:58 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

பல்கலைக்கழகத்தின் டீன் அகடாமிக் தேவராஜ் பட்டய வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: யோகா வகுப்பு, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்டுள்ள அறையில் தினமும் கலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை கற்றுத் தரப்படுகிறது. மாணவர்களின் பாடதிட்ட நேரத்தில் இதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முடிவில் மூன்றுநாள் செய்முறைப் பயிற்சி ஆழியாரில் உள்ள மனவளக்கலை தியானக் கூடத்தில் நடைபெறும். மற்ற தேர்வுகள் பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும். இதில் 9 வகையான உடற் பயிற்சிகள், 5 வகையான தியானப் பயிற்சிகள், 4 அகத்தாய்வு பயிற்சிகள், 9 தலப் பயிற்சி இந்த ஆண்டு கற்றுத்தரப்படுகிறது என்றார் அவர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள பேராசிரியர் வெண்குமார் பேசுகையில் கூறியதாவது: இந்தப் பட்டயப் படிப்பிற்கு யோகா யூத் எம்பவர்மெண்ட என்று பெயர் என்றார். யோகா பயிற்றுநர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.