விருதுநகர் அருகே பறிமுதல் செய்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே வேலுச்சாமி நகரில் உணவு கடத்தல் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாகனங்களில் ரேசன் அரிசிகளை கடத்தும் போது பிடிப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் வளாகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தாரம். இதை அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் பார்த்து பின்தொடர்ந்து பிடித்தாராம்.
இது குறித்து விசாரணை செய்ததில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(29) என்கிற விவரம் தெரியவந்தது.
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் செந்தில்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


