ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News image
Updated On :17 ஜூலை 2015, 12:54 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகள் பானுப்பிரியா (24). இவருக்கும் கோயமுத்தூர், ஆர்.எஸ்.புரம், மேற்கு பாசியக்காரத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் 7.7.14-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது இருந்தே கணவன் மனைவிக்கிடையே வரதட்சிணை பிரச்னை இருந்து அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் தம்பி சேதுராமன் என்பவர் பானுப்பிரியாவிடம் ரூ.5 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்தாராம். மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாயும் மிரட்டினாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பானுப்பிரியா புகார் செய்தார். போலீஸார் ஹரிகிருஷ்ணன், அவரது தாய் ரேணுகாதேவி, தம்பி சேதுராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.