ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான 20:20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 20:20 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :19 ஜூலை 2015, 8:50 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 20:20 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாம் ஜெபராஜ் முன்னிலையில், அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் தொடங்கி வைத்தார். அரிமா மண்டலத் தலைவர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வேலாயுதம் கூறியதாவது: போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி நிறைவடையும். வெற்றி பெற்ற அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் கிரிக்கெட் கிளப் அணியும், சிவகாசி டாஸ்மோனியன் கிரிக்கெட் கிளப் அணிகளும், மாலையில் மதுரை சர்வம் கிரிக்கெட் கிளப் அணியும், ராஜபாளையம் மிராக்ளஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. சங்கத்தின் பொருளாளர் த.திருப்பதிராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.