மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாள்தோறும் குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாள்தோறும் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :20 ஜூலை 2015, 12:23 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாள்தோறும் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராம ஊராட்சியில் 3 மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன.
   
அதில், கிழக்கு தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்குள்ள மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் நிரம்பும் ஆழ்குழாய் கிணற்றில் நீர் வரத்து இல்லை. அதனால், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட நீரை நம்பியே இருக்கிறோம். அதுவும் வாரத்திற்கு ஒருமுறை வருவதால் குறைந்த அளவே குடிநீர் பிடிக்க முடிகிறது. மேலும், மற்ற நாள்களில் 2 கி.மீ தூரம் நடந்து சென்று பம்ப்செட் கிணறுகளில் நீர் எடுத்து வரவேண்டியுள்ளது.

எனவே, அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் போதுமான குடிதண்ணீர் உள்ளது. அதிலிருந்து கிழக்கு தெருவுக்கு மட்டும் திறந்து விட மறுக்கின்றனர். இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.

இது குறித்து ஊராட்சி தலைவரிடம் முறையிட்டாலும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. அதனால், எங்கு தெரு மக்கள் பயனடையும் வகையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.