28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு ரூ.2.69 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

ராஜபாளையத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :21 ஜூலை 2015, 1:45 pm

கோ.ஜெயக்குமார்

ராஜபாளையத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையம், சத்திரப்பட்டி, இல்லத்துப்பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர் தையல் தொழில் செய்து வந்தார். 20.12.2008-ம் தேதி தனது கணவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது புளியங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் காயமுற்றனர்.

மகாலட்சுமி தனக்கு இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ராஜபாளையம் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், மகலட்சுமிக்கு ரூ.2,69,462 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.