ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குறித்த நாளில் இயந்திரம் வழங்காத நிறுவனம் செலுத்திய பணம் ரூ.5.90 லட்சத்தை ரூ.25 இழப்பீட்டுடன் வழங்க உத்தரவு

தானியங்கி காகித கப் தயாரிக்கும் இயந்திரம் வாங்க ரூ.5.90 லட்சம் கொடுத்தும் குறிப்பிட்ட நாளில் இயந்திரம் வழங்காததால், குறிப்பிட்ட நிறுவனம் செலுத்திய தொகை ரூ.5.90 லட்சத்தை 9 சதவீதம் வட்டி மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூ.25 ஆயிரத்துடன்

News image
Updated On :21 ஜூலை 2015, 1:43 pm

கோ.ஜெயக்குமார்

தானியங்கி காகித கப் தயாரிக்கும் இயந்திரம் வாங்க ரூ.5.90 லட்சம் கொடுத்தும் குறிப்பிட்ட நாளில் இயந்திரம் வழங்காததால், குறிப்பிட்ட நிறுவனம் செலுத்திய தொகை ரூ.5.90 லட்சத்தை 9 சதவீதம் வட்டி மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூ.25 ஆயிரத்துடன் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வள்ளுவர்தெரு-ஞானம் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி ராபா எம்.அமலா. சிவகாசி, கார்நேஷன் காலனி, திருத்தங்கல் சாலையில் மாருதி டெக் என்ற நிறுவனம் நடத்தி வருபவர் மஞ்சுலட்சுமி.

ராபா எம்.அமலா சுயதொழில் செய்வதற்காக, மஞ்சுலட்சுமி நடத்தி வரும் நிறுவனத்தில் தானியங்கி காகித கப் தயாரிக்கும் இயந்திரம் வாங்க 15.6.2011-ம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஒப்பந்தப்படி, நாகர்கோவிலில் உள்ள கமலக்கண்ணன் அலுவலகத்தில் வைத்து பணம் ரூ.5.90 லட்சம் செலுத்தி அதற்கான ரசீது பெற்றுள்ளார்கள். ஒப்பந்தத்தின்படி, 30 நாட்களுக்குள் இயந்திரத்தை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அதன்படி 15.7.11-ம் தேதி தரவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, 5.9.11-ம் தேதிக்குள் டெலிவரி செய்வதாயும், தவறும்பட்சத்தில் பெற்ற தொகையை திருப்பித் தருவதாயும் கூறியுள்ளார்கள். ஆனால் அந்த தேதியிலும் இயந்திரம் டெலிவரி செய்யப்படவில்லை.

மாருதி டெக் நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது என்றும், செலுத்திய பணத்தை வட்டியுடன் திரும்பத் தர வேண்டும். சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் ராபா எம்.அமலா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்:

இரு தரப்பு ஆவணங்களையும், சாட்சியங்களையும் மிக் கவனமாக பரிசீலிக்கும்போது, ரூ.5.90 லட்சம் பெற்றுக் கொண்ட பின்னரும் ஒப்பந்தப்படி, குறித்த காலத்தில் இயந்திரத்தை டெலிவரி செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

பொருளுக்கான முழுத் தொகையும், பொருள் வாங்குபவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின், அந்தப் பொருளை அவருக்கு குறித்த காலத்திற்குள் டெலிவரி செய்யாவிட்டால், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, அது சேவைக் குறைபாடாகும். எனவே மாருதி டெக் நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது என்று முடிவு செய்யப்படுகிறது.

ராபா எம்.அமலா செலுத்திய தொகை ரூ.5.90 லட்சத்தை மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து, தொகை வசூலாகும் தேதி வரை 9 சதவீதம் வட்டியுடன் மாருதி டெக் நிறுவனம் வழங்க வேண்டும். ராபா எம்.அமலாவிற்கு ஏற்பட்ட பலத்த மன கஷ்டத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்குச் செலவிற்கு 5 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டது.w

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.