ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை மானபங்கம் செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை புதன்கிழமை மானபங்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :22 ஜூலை 2015, 2:29 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை புதன்கிழமை மானபங்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், இடையபொட்டல்-சங்கு ஊரணி கரையைச் சேர்ந்தவர் முனியாண்டி மகள் காளீஸ்வரி (21). இவர் கேரளா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு தற்போது ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் குரூஸ்மாணிக்கம் மகன் விமல் (எ) விமல்ராஜ் (27) என்பவர், காளீஸ்வரியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாகப் பேசி இவரை மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அருகில் இருந்த தாயும், காளீஸ்வரியும் கூச்சலிடவே விமல் தப்பி ஓடிவிட்டாராம். இது குறித்து காளீஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விமல் (எ) விமல்ராஜைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.