ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநில கிக் பாக்ஸிங் போட்டி: கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த சாம்பியன்

சென்னை, மாநில கிக் பாக்ஸிங் அசோஸியேசன், சென்னையில் நடத்திய மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றார்கள். இப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News image
Updated On :29 ஜூலை 2015, 9:16 am

கோ.ஜெயக்குமார்

சென்னை, மாநில கிக் பாக்ஸிங் அசோஸியேசன், சென்னையில் நடத்திய மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றார்கள். இப் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு இ.சி.இ. மாணவர் எஸ்.மகாசுரேஷ் 63 கிலோ எடை பிரிவில் லோ கிக் முறையில் தங்கப் பதக்கமும், பாயிண்ட் ப்பைட் முறையில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

நான்காம் ஆண்டு ஆட்டோமொபைல் துறை மாணவர் எஸ்.ஜோயல் பால் தாமஸ் 57 கிலோ எடைப் பிரிவில் லோ கிக் முறையில் வெள்ளிப் பதக்கமும், புல் காண்டாக்ட் முறையில் வெண்கலமும் வென்றார்.

மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் கே.வி.ராம் பிரசாத் 69 கிலோ எடைப் பிரிவில் பாயிண்ட் ப்பைட் முறையில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டாம் ஆண்டு பி.ஆர்க். மாணவர் ஏ.எஸ்.ஆதவ மகாகணபதி, 74 கிலோ எடைப் பிரிவில் புல் காண்டாக் முறையில் வெள்ளிப் பதக்கமும், பாயிண்ட் ப்பைட் முறையில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் 2-ம் இடம் பெற்று வெள்ளிக் கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர்கள் எஸ்.விஜயலட்சுமி, ஜி.டி.செல்வகணேஷ் ஆகியோரையும் வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் புதன்கிழமை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.