சிதம்பரம் அருகே சாலைவிபத்தில் தனிப்பிரிவு காவலர் பலி
சிதம்பரம் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் புவனகிரி தனிப்பிரிவு காவலர் நீலமோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


சிதம்பரம் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் புவனகிரி தனிப்பிரிவு காவலர் நீலமோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டையைச் சேர்ந்தவர் என்.நீலமோகன் (48). இவர் புவனகிரி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். சிதம்பரம் குமரன் தெருவில் வசித்து வரும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்துவிட்டு புறவழிச்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் வந்துள்ளார். அப்போது பைசல் மஹால் புறவழிச்சாலையில் பிரம்மராயர் கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கியெறிப்பட்டார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவலர் மீது மோதிய வாகனத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த போன காவல் நீலமோகனுக்கு மனைவி மற்றும் இருமகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...