மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே இளம் பெண் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என்று தாய் வியாழக்கிழமை விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :28 மே 2015, 1:14 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என்று தாய் வியாழக்கிழமை விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளம் செவக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பெரியய்யா மகள் நித்யா(17)  இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தந்தை கடந்த 4 வருடங்களுக்கு முன் இறந்ததை தொடர்ந்து அப்பகுதிகளில் தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே, 26-ம் தேதி இலுப்பூரில் தார் சாலை அமைக்கும் பணிக்கு சென்ற நித்யா வீடு திரும்பவில்லையாம், இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பார்வதி அக்கம் பக்கம் தேடியுள்ளார். எங்கும் நித்யா கிடைக்காத நிலையில் தாய் பார்வதி விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.